Sunday, May 16, 2010

ராஜபக்சே இந்தியா வருகிறார்

இலங்கை அதிபர் ராஜபக்சே ஜூன் 8-ம் தேதி இந்தியா வருகிறார்.  அவர் இலங்கையில் மீண்டும் அதிபர் ஆன பின்பு இந்தியா வருவது இதுவே முதல் முறை.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸும் தெஹ்ரானில் இன்று சந்தித்துப் பேசினர். 

ஜி 15 மாநாட்டுக்காக இருவரும் தெஹ்ரானுக்கு வந்துள்ளனர்.  இருவரும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாகவும், இச்சந்திப்பின்போது இலங்கையில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அதிபர் ராஜபக்சே ஜூன் 8-ம் தேதி இந்தியா வரத் திட்டமிட்டுள்ளதாக பெரிஸுடனான சந்திப்புக்குப் பின் எஸ் எம்.கிருஷ்ணா தெரிவித்தார். 

ராஜபக்சே, பிரதமர் மன்மோகன் சிங்கை திம்ப்புவில் நடைபெற்ற சார்க் உச்சிமாநாட்டின்போது கடைசியாக சந்தித்திருந்தார்.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment