Tuesday, May 25, 2010

மலேசிய முகாமில் 67 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்

மலேசிய கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 75 ஈழத்தமிழர்களை (பெண்கள், குழந்தைகள் உள்பட) பினாங்கு கடற்கரைக்கு மலேசிய கடற்படை அழைத்து வந்தது. 

எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும்படி 75 ஈழத்தமிழர்களும் மலேசிய அரசை கேட்டுக்கொண்டனர்.

இதை முதலில் எற்றுக்கொண்ட மலேசிய அரசாங்கம், பிறகு ஏற்க மறுத்ததால் கப்பலை விட்டு இறங்காமல் 2 நாள் பழுதடைந்த கப்பலிலேயே இருந்தனர். மீறி எங்களை இறக்க முயற்சி செய்தால் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றும் அறிவித்தனர்.

இதையடுத்து, பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சமாதானம் செய்து கரைக்கு அழைத்து வந்தார்.

அதன்பிறகு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனி முகாம்களில் அடைக்கப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தும் முகாம்களை விட்டு வெளியே அனுப்பவில்லை என்று முகாமில் உள்ள 67 ஆண்கள் கூறினர்.

இப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 67 ஆண்கள் மட்டும் இன்று  (25.05.2010) முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment