Sunday, October 17, 2010

கொளத்தூர் மணியை சுட்டுவிடுவேன் என்று துப்பாக்கியை நீட்டிய போலீஸ் மீது தாக்குதல்

கொளத்தூர் மணியை சுட்டுவிடுவேன் என்று துப்பாக்கியை நீட்டிய போலீஸ் மீது தாக்குதல்

kolathur mani

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணியை நோக்கி துப்பாக்கியை நீட்டி சுட்டுவிடுவேன் என்ற போலீஸ்காரரை தமிழர்கள் தாக்கியுள்ளார்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, September 24, 2010

மோதல்களை முளையிலேயே கிள்ளியெறிய ஏற்பாடுகள் வேண்டும்:பேரியல் அஷ்ரப்

மோதல்களை முளையிலேயே கிள்ளியெறிய ஏற்பாடுகள் வேண்டும்:பேரியல் அஷ்ரப்

z_page-06-No-more

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்  இன மோதல்களை முளையிலேயே கிள்ளிவிடுவதற்கான நிறுவன ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என கூறினார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, September 23, 2010

மீனகம் ஓராண்டில் கொளத்தூர் மணியின் வாழ்த்துச்செய்தி

 
 
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் த.செ.மணி அவர்கள் மீனகம் தளத்தின் ஓராண்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 

Wednesday, September 22, 2010

பொன்சேகாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டக் கூட்டங்கள்

பொன்சேகாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டக் கூட்டங்கள்

sarath_fonseka

ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரியும் இலங்கையில் ஜனநாயக நியமங்களை பாதுகாக்குமாறு கோரியும் வெளிநாடுகளில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டக் கூட்டங்களை நடத்தவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் மகள் அப்சராவும் இக்கூட்டங்களில் பங்குபற்றவுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, September 21, 2010

மயான பூமியான நந்திக்கடலில் போர் எச்சங்கள்; மாலைவேளை பார்த்துத் திரும்பினர் ஆணைக்குழு உறுப்பினர்கள்

மயான பூமியான நந்திக்கடலில் போர் எச்சங்கள்; மாலைவேளை பார்த்துத் திரும்பினர் ஆணைக்குழு உறுப்பினர்கள்

2010_Sep_21_090714__n2

கடந்த வருடம் ஏப்ரல், மே மாதங் களில் இறுதி யுத்தம் இடம்பெற்ற  ஆயிரக் கணக்கானோரைக் கொன்றொழித்த  முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், வலைஞர் மடம் வட்டுவாகல்  பகுதிகளுக்கு நேற்று மாலைப்பொழுதில் சென்று பார்வையிட் டுள்ளனர் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவரும் மற்றும் உறுப்பினர்களும். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, September 19, 2010

Fwd: ஓராண்டில் மீனகம் தளம் 24.09.2010

அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே

வணக்கம்

தமிழர்களுக்கான இணைய ஊடகங்கள் பல இருப்பினும். கடந்த 24.09.2009 அன்று தொடங்கப்பட்ட எமது www.meenakam.com இணைய ஊடகம் தமிழர்களை எவ்வித குழப்பத்துக்குள் ஆளாக்காமல் செயல்பட்டு ஓராண்டை நெருங்கவுள்ளோம்.

பல்வேறு ஊடகங்களுக்கு நடுவில் தனித்துவமிக்கதாக உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக சேவையாற்றிவருகிறோம். "வரலாறே எமது வழிகாட்டி" என்பதற்கிணங்க தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை திரட்டி பதிவு செய்துவருகிறோம். இணைய ஊடகங்களில் முதன் முறையாக எவ்வித கட்டணமின்றி இலவயமாக தொடர்ச்சியாக நேரலை ஒளிபரப்பிலும் ஈடுபட்டுவருகிறோம்.

எமது இச்சேவையின் வளர்ச்சிக்கு உலகத்தமிழர்களாகிய நீங்களே காரணம். உலகத்தமிழ் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஒரே ஊடகம் எமது மீனகம் இணைய ஊடகம் மட்டுமே என்பது உலகத்தமிழர்களாகிய நீங்கள் அறிந்ததே.

இவ் ஓராண்டில் எமது ஊடக சேவைக்கு தொடர்ச்சியாக பங்களித்து வரும் சே.பாக்கியராசன், பாவலர் வித்தியாசாகர், செல்லையா பரராஜசிங்கம், தயாளன் சபாரத்தினம், பெயர் வெளியிட விரும்பாத சிங்கப்பூர் மற்றும் தமிழக தமிழர்களுக்கும் அவ்வப்பொழுது எமக்கு பங்களித்துவரும் உறவுகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதே போல் எமது ஊடகத்தினை சிறப்புடன் நடத்த ஆலோசனை வழங்கி உதவிவரும் தரவு விமல், மலர்வனம் நிரோ, தமிழம் பொள்ளாச்சி நசன்  மற்றும் எமது ஊடகம் மக்களிடம் சென்றடைய உதவிய தமிழ்வெளி புருசோத்தமன், தமிழ்மணம், தமிழிசு, தமிழ்10 , பகலவன், நாம் தமிழர் கூகுள் குழுவினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது தளத்தினை தொடர்ச்சியாக பார்வையிட்டு தங்களின் கருத்துக்களை பதிந்துவரும் இலக்குவனார் திருவள்ளுவன் மற்றும் அசோக் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்களின் விடியலுக்காக செயல்பட்டுவரும் அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் எமது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

2010 செப்டம்பர் 24 அன்று  ஓராண்டை நெருங்கும் எமது தளத்தினைப்பற்றிய நிறைகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்களையும் உங்களிடமிருந்து வரவேற்கிறோம்.

நன்றி
 
காந்தரூபன்

மீனகம் தளம்

--
மீனகம் குழுவினர்

WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG

எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com

Saturday, September 4, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையதளத்தில் இலவசமாக தெரிவியுங்கள்


தமிழ் உறவுகளே உங்கள் குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையதளத்தில் இலவசமாக உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
 

தமிழ் ஊடகங்கள் www.meenakam.com