Saturday, May 15, 2010

"குருதியில் உறைந்த மே 17"



"குருதியில் உறைந்த மே 17"
இனப்படுகொலை" கண்டனப் பொதுக்கூட்டம்
 
நாள் : 16-05-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு
இடம் : கே.கே.சாலை, எம்.ஜி.ஆர்.நகர் கடைவீதி
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழ விடுதலையில் பல்வேறு வகைகளில் தன்னை ஒப்படைத்துக்கொண்டு புலிகளையும், ஈழ விடுதலையையும் ஆதரித்ததால்  அடக்குமுறை  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இரண்டுமுறைக்கு மேலும், ராஜீவ் காந்தி கொலை படுகொலையல்ல தண்டனையே என்பதற்காக மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையேகியும் இனி என்ன செய்யப்போகிறோம் என்ற குறுந்தகடை வெளியிட்டதற்காக அடக்குமுறைக்கு உள்ளாகி , விளம்பரங்களை தவிர்த்து இன்றும் இயக்கத்தின் நம்பிக்கைக்குரியவராக செயல்பட்டு வரும்

தோழர். தா.செ.மணி
தலைவர், பெரியார் திராவிடர் கழகம் அவர்களும்


 தனது வயோதிகத்தையும் பொருட்படுத்தாது, முன்னாள் அமைச்சர் என்பதை தூக்கி எறிந்து பெரியாரியல் கொள்கையில் செயல் பட்டு வரும்
 ஆனூர்.கோ.செகதீசன்
துணைத் தலைவர், பெரியார் திராவிடர் கழகம்அவர்களும்

புலிகளை ஆதரித்ததற்காக மூன்றாண்டுகாலம் தடா சிறையில் ஏகி பின்னரும் போராட்டக் களத்தில் நின்று இறுதியாக இராணுவ ஊர்திகளை மறித்து தாக்கிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட
கு.ராமகிருட்டிணன்
பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்  அவர்களும்
 
இதழாளர் கா.அய்யநாதன் அவர்களும் உரையாற்ற உள்ளனர்
உலக தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள்" புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளது,
மேலும் தேனிசை செல்லப்பா அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும்
மற்றும் இனவெறித் தாக்குதலில் பலியான தமிழர்களின் புகைப்படக் கண்காட்சி நடைபெறும்
- பெரியார் திராவிடர் கழகம், சென்னை மாவட்டம் :தொடர்புக்கு 94440 11124, 94440 25408.
தமிழரின் தாகம்  தமிழீழத் தாயகம்

 

No comments:

Post a Comment