Sunday, May 30, 2010

சிறீலங்கா அரசு போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பிரச்சாரம் செய்யும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனம் ஜெனீவா விஜயம்

www.    


சிறீலங்கா அரசாங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பிரச்சாரம் செய்யும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பத்து பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளிளிட்டுள்ளது. மேலும் »

தனது மக்களுக்கு உணவளிப்பதற்கு கூட சிறீலங்கா அரசு உலக உணவுத்திட்டத்தை நம்பியுள்ளது

சிறீலங்கா அரசு அபிவிருத்திகளை கண்டுவருவதாக தெரிவித்துவரும் போதும் அது தனது மக்களில் பெருமளவானவர்களுக்கு உணவு அளிப்பதற்கு ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அமைப்பையே நம்பியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

நல்லிணக்க ஆணைக்குழுவை உன்னிப்பாக அவதானிப்போம்: வாஷிங்டன் செய்தியாளர் மாநாட்டில் றொபேர்ட் பிளேக்

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவை உன்னிப்பாகப் பரிசீலிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  இது இலங்கைக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள இதர நாடுகளிலும் வெற்றிகரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டிய விவகாரம் என்று தெற்காசிய, மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் றொபேர்ட் பிளேக் கூறியுள்ளார். மேலும் »

புலம்பெயர் தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடுத்துள்ள இராஜதந்திரப் போர் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சிறீலங்காவின் புதிய அரசாங்கம், அதன் பழைய அரச தலைவரின் தலைமையில் முற்றுமுழுதான ஒரு இராஜதந்திரப்போரில் தற்போது இறங்கியுள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும் »

யாழ்ப்பாணம் – அராலியில் சிறீலங்காப்படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கை

யாழ்ப்பாணம் அராலியில் சிறீலங்காப்படையினர் வீதிச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது: மகிந்த ராஜபக்ச

இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது ஆயுதரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒப் இந்தியா செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் »

வடக்கு கிழக்கில் 140ற்கு மேற்பட்ட மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்

வடக்கு கிழக்கு பகுதிகளில் 140ற்கு மேற்பட்ட மாவணவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும் »

சிறீலங்காவுக்கு அதிக உதவிகளை வழங்கப்போவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவிப்பு

சிறீலங்காவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அதிக உதவிகளை வழங்கப்போவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் »

கிளிநொச்சியில் 5 பெண் உடலங்கள் மீட்பு

கிளிநொச்சியில் மலக்குழி ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட சடலங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த காணிக்கு மிக அருகாக உள்ள ஒரு காணி ஒன்றின் மலக்குழி ஒன்றிலேயே இச்சடலங்கள் காணப்படுகின்றன. மேலும் »

தமிழினத்தின் அடையாளம் தேசிய தலைவர் -கண்மணி

தேசிய தலைவர்2009ஆம் ஆண்டு மே திங்கள் 17ஆம் தேதி தமிழீழ வரலாற்றின் ஒரு அத்தியாயம் நிறைவு செய்யப்பட்டு புதிய அத்தியாயம் தொடங்கியது. தேசிய இன போராட்ட வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு இழப்பு வேறு எந்த இன விடுதலை போராட்டத்திலும் நிகழ்ந்தது கிடையாது. மேலும் »

சங்கொலி 2010 இறுதிப்போட்டியும் பிரிகேடியர்.பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும்.

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு 2வது தடவையாக நடாத்தும் சங்கொலி பாட்டுத்திறன் போட்டிகளின் இறுதிப்போட்டி 30.05.2010 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர்.பால்ராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும்  நடைபெறவிருக்கிறது. மேலும் »

சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் – சம்பிக ரணவக

உலகெங்கும் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சரும் ஹெல உறுமய கட்சியின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக ரணவக கேட்டுள்ளார். மேலும் »

காகிதப்பூ மணக்காது!காங்கிரசு ஜெயிக்காது

தமிழ்நாட்டில் திராவிட இயக்க அரசியலில் முதல் எதிரியாக சித்தரிக்கப்பட்ட அரசியல் கட்சி காங்கிரஸ்.தந்தை பெரியார் காங்கிரஸ் பெரியக்கத்தில்,இட ஒதுக்கீடு குறித்த தீர்மானத்திற்கு போதுமான ஆதரவு இல்லாத நிலையில்,காங்கிரஸை விட்டு வெளியேறிய போது,திராவிட இயக்க அரசியல் அடித்தளம் என்பது காங்கிரஸ் எதிர்ப்பாக உருவெடுத்தது.அதன் பரிணாம வளர்ச்சி,திமுகவும் அரசியலில் ஆட்சிக்கட்டிலில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைபாட்டை தொடரவேண்டிய தாயிற்று. மேலும் »

வெறும் கதைகேட்ட இனமே…

உள்ளே மின்னலாய் வெட்டி
உள்புகுந்து -
உயிர்தின்கிறது முல்லிவைக்காளின்  ஓலம்; மேலும் »

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை விசாரணைக்குழு வழங்க வேண்டும்: கிலாரி கிளிங்டன்

சிறீலங்காவில் நான்கு தசாப்தங்களாக நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோள்களை சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லினக்க விசாரணைக்குழு குழு நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார். மேலும் »

சரணடைந்த புலிகள் கொல்லப்படமாட்டார்கள் என்று நான் உறுதியளிக்கவில்லை: பாலித்த கோகன்ன தெரிவிப்பு

இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக்கொலைப்படமாட்டார்கள் என்று தாம் எந்த உறுதிமொழியையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாருக்கு வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித்த கோகன்ன தெரிவித்துள்ளார். மேலும் »

விசேட அதிரடிப்படையும் கோத்தபாய கட்டுப்பாட்டில்

விசேட அதிரடிப்படையை கோத்தபாய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் »

சிறீலங்காவின் பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையாது: ஆசிய அபிவிருத்தி வங்கி

சிறீலங்காவின் பொருளாதாரம் எதிர்வரும் வருடம் 7 விகித வளர்ச்சியை காணலாம், ஆனால் அது எதிர்பார்த்த விகிதமாக இருக்காது என சீனாவுக்கு அடுத்தபடியாக சிறீலங்காவுக்கு அதிகளவு உதவிகளை வழங்கிவரும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. மேலும் »

நிதிப் பற்றாக்குறை காரணமாக வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பாதிப்பு

நிதிப் பற்றாக்குறை காரணமாக வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பெரும் பாதிப்புக்களை சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு பலமிக்க நாடுகள் தடையாக உள்ளன : சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு

இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளுக்கு பலமிக்க சர்வதேச நாடுகளே தடையாக உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment