Tuesday, May 25, 2010

உறவுகளே கீழ்க்காணும் இணைப்பில் கையொப்பம் இடவும்

www.    

உறவுகளே கீழ்க்காணும் இணைப்பில் கையொப்பம் இடவும்

ஐம்பதினாயிரம் [50,000] கையொப்பம் கிடைத்தால் ஐ.நா இந்த கோரிக்கையை நிராகரிக்கமுடியாது. மேலும் »

தேசிய தலைவரின் பாதை -கண்மணி

ஆதிக்க சக்திகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறார்கள். அது ஜெர்மனாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், பிரிட்டனாக இருக்கட்டும், ரஷியாவாக இருக்கட்டும். ஆதிக்கமும் அதன் அடங்காப்பிடாரித் தனமும் வெவ்வேறாக இருந்ததில்லை. மேலும் »

இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத கோரமான அழிவுகள்

வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத, கோரமான அழிவுகள் நடைபெற்றிருக்கின்றன. எங்கும் அதிர்ச்சிதரும் காட்சிகளையே தற்போது காணநேர்ந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். மேலும் »

சிறீலங்கா காட்டுமிராண்டி அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் ராணுவத்தின் நடத்தையை பாருங்கள்

சிறீலங்கா அரச பயங்கரவாத படையினர் இறந்த போராளிகளை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று பாருங்கள், போரில் கொல்லப்பட்டவர்களை அதுவும் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி தூக்கி எறிவதும், இறந்த உடலங்களை காலால் தட்டி, இழுத்துச் செல்வதுமாக, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைகளை புரிகிறது. மேலும் »

யாழ் குடாநாட்டில் மேலும் புதிய காவலரண்கள் அமைப்பு – அச்சத்தில் மக்கள்

போர் முடிவடைந்து விட்டதாகவும், விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாகவும் கூறிவரும் சிறீலங்கா படையினர் யாழ் குடாநாட்டை தொடர்ச்சியாக ஆக்கிரமித்து நிலைகொண்டிருப்பதுடன், அங்கு மேலும் பல புதிய காவலரண்களையும் அமைத்து வருகின்றனர். மேலும் »

ஆயுதங்களுடன் காவல்துறையினர் சுற்றிநிற்க பரீட்சை எழுதிய பல்கலைக்கழக மாணவர்கள்

சிறீலங்கா காவல்துறையினர் ஆயுதங்களுடன் சுற்றிநிற்க பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பரீட்சை எழுத நேர்ந்திருப்பதுடன், ஆயுதங்களுடன் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழையும் அடாவடித்தனத்தை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். மேலும் »

ஆதனங்களை அபகரிக்கும் பாவத்தனங்கள் வேண்டாம்

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. யுத்த சூழல், விடுதலைப்புலிகள் மீதான பயம் இவற்றினால் அமிழ்ந்து போயிருந்த ஏமாற்றுத் தனங்களும், கபளீகரங்களும், கயமைத்தனங்களும் இப்போது நட்டுவாங்கத்துடன் நடன மாடத் தொடங்கியுள்ளன. மேலும் »

பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளிடம் விசாரணை ஆரம்பம்

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சிகளிடம் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அதன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் »

வடக்கு கிழக்கில் நிவாரணம் நிறுத்தம் – தென்பகுதியில் 50,000 ரூபா வெள்ள நிவாரணம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் »

கிழக்கில் வெசாக்கை கொண்டாட ஆயத்தமாகும் சிறீலங்காப்படையினர்

இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் சிறீலங்காப்படையினர் வெசாக் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். மேலும் »

நாடு கடந்த அரசிற்கெதிரான இலங்கையின் இன்னொரு பாரிய சதி: இந்திய ஊடகங்கள் மூலம்

நாடுகடந்த அரசு தொடர்பான அச்சத்திலிருந்து விடுபட முடியாமலிருக்கும்  இலங்கை அரசு நாடுகடந்த தமிழீழ அரசிற்கான முயற்சிக்கெதிராக ஈடுபடுத்தியுள்ள பாலித கோகன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சிறீலங்கா அரச துணைக்குழுத்தலைவர் கருணா போன்றோரோடு தற்போது  ரொஹான் குணரட்ண என்ற சிங்களப் பேராசிரியரையும் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் »

Channel4 வெளியிட்ட படத்தில் தந்தையை அடையாளம் கண்ட 7 அகவை மகள்

சிறீலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் பல படங்கள் சனல் 4 தொலைக்காட்சியால் கடந்த வாரம் வெளியிடப்பட்டது அப்படங்கள் யாழ்ப்பாண உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அப்படங்களில் தனது தகப்பனார் இருப்பதை 7 வயதான மகள் அடையாளம் கண்டுள்ளார். மேலும் »

ஆறுவயதுச் சிறுமியைக் கடத்தும் முயற்சி சாவகச்சேரியில் முறியடிப்பு

சாவகச்சேரி நவீன சந்தைப் பகுதியில் வைத்து ஆறு வயதுச் சிறுமி ஒருவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் »

பகத்சிங்கும் தேசிய தலைவரும் -கண்மணி

புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. மேலும் »

விடுதலை குறித்து பேசுவோம் -கண்மணி

நாம் பேசுவோம் வாருங்கள்…
நமது விடுதலை
குறித்து. மேலும் »

இடம்பெயர்ந்தவர்களில் 25 வீதமானோர் தொடர்ந்தும் முகாம்களில்!

யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள போதிலும் போர் காரணமாக இடம்பெயர்ந்த 25 வீதமான மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். 62 ஆயிரத்து 805 பேர் தொடர்ந்தும் முகாம்களில் இருப்பதாக மீள்க்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் »

இந்தியா எம்மை அச்சுறுத்திய காலம் மலையேறி விட்டது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய அரசியல் தீர்வு தேவையென்பதை இந்தியா எமக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை: குணதாச அமரசேகரா

இந்தியா எம்மை அச்சுறுத்தி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது என்றும் இப்போது இலங்கைக்குப் பக்க பலமாக சீனா, ஈரான் ஆகிய நாடுகள் இருக்கின்றன என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா தெரிவித்துள்ளார். மேலும் »

ஈழத்தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலை – விமானம் மூலம் கவனயீர்ப்பு போராட்டம்

ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விமானம் மூலம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. மேலும் »

வழக்குகளை திரும்பப்பெற்றாலே திஸ்ஸநாயகத்திற்கு பொதுமன்னிப்பு – சிறீலங்கா

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், தாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை வாபஸ் வாங்கும் வரையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் »

யாழில் இந்திய தூதரகம் – சிறீலங்கா அரசு விசனம்

யாழில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது சிறீலங்கா அரச தரப்புக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment