Monday, May 17, 2010

நளினியை புழல் சிறைக்கு மாற்ற பரிந்துரை



ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் நளினி, சிறைத் துறை கூடுதல் டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 'இந்தியாவின் உயர்ந்த அதிகாரத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர் என்னை தன் அருகே உட்கார வைத்து, தொட்டுப் பேசி, தண்ணீர் பருக கொடுத்து ஒரு சாதாரண சிறைவாசியை அசர் மனுஷியாய் உணரச் செய்தார்' என்று சிறைத் துறை கூடுதல் டிஜிபிக்கு எழுதியுள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

24.04.2010 அன்று எழுதியுள்ள புகார் கடிதத்தில் 20.04.2010 அன்று தன்னுடைய சிறையில் நடத்தப் பட்ட சோதனையில் சிறைக்கு புறம்பான எந்தப் பொருளையும் கைப்பற்றப் படவில்லை.   சிறை ஊழியர்களே, சிறைக்கு புறம்பான பொருட்கள் எதையாவது, என்னுடைய சிறைக்குள் போட்டு விடுவார்கள் என்று அஞ்சுகிறேன். என்று தெரிவித்திருக்கிறார் நளினி.

மற்ற கைதிகள் யாரையும் என்னிடம் பேச அனுமதிப்பதில்லை.  அப்படி மீறிப் பேசினால், அந்த கைதிகளுக்கு கடும் தண்டனை வழங்கி அச்சுறுத்தி வைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் விளக்கம் வேண்டும் என சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் பதில் அளிக்கையில்; இந்த பிரச்னை குறித்து விசாரிக்க சிறைத்துறை டி.ஐ.ஜி., குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவில் பெண்அதிகாரியும இடம் பெறுவர். விசாரித்து அறிக்கை தந்ததும் அடுத்த நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

இதற்கிடையில், நளினியின் புகார்கள் குறித்து, கோவை சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜ் தலைமையில் அமைக்கப் பட்ட குழு, தனது அறிக்கையை கூடுதல் டிஜிபி ஷ்யாம் சுந்தரிடம் அளித்து விட்டதாகவும், அந்த அறிக்கையை விரைவில் அவர் அரசுக்கு அனுப்பக் கூடும் என்றம் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும், அந்தக் குழுவில் உள்ள சிறைக் கண்காணிப்பாளர் சேகர், நளினியை புழல் சிறைக்கு மாற்ற பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

 -- 

தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment