Saturday, May 15, 2010

‘போர் முகங்கள்’ தமிழரின் துயரமும் வீரமும்

ஈழத் தமிழருக்கு எதிராக இனவெறி சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் தமிழர்கள் பட்ட துயரத்தையும், தமிழீழ விடுதலைப் போராளிகள் வெளிப்படுத்திய வீரத்தையும் ஒரு சேர சித்தரித்திருக்கிறார் ஓவியர் புகழேந்தி.

'போர் முகங்கள' என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தீட்டிய ஓவியங்களின் காட்சி சென்னை தியாகராயர் நகரில் வெங்கட நாராயணா சாலையில் உள்ள செ.தெ.நாயகம் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

1983ஆம் ஆண்டு முதல் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பெளத்தப் பேரினவாத அரசு தொடுத்துவரும் இனப்படுகொலைப் போரின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓவியங்களை புகழேந்தி படைத்துள்ளார்.
WD

கடந்த ஆண்டு மே மாத்ததில் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் எனும் சிறு நில்ப்பரப்பில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட துயர நிகழ்வை ஓவியங்களாக்கியுள்ள புகழேந்தி, சிங்கள இராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பதுங்கு குழிகளில் ஒடுங்கிய அப்பாவித் தமிழர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதை ஒரு பெரும் ஓவியமாக வரைந்துள்ளார். மரணிக்கும் தருவாயில் அவர்கள் உலகை நோக்கி கோரிக்கை விடுப்பது போல இரத்தக் குளியலில் கைகளை உயர்த்தி ஓலமிடும் காட்சி அங்கு நடந்த படுகொலையின் கொடூரத்தை சித்தரிக்கிறது.

WD
இந்த ஒரு ஓவியத்தைத் தவிர மற்ற ஓவியங்கள் அனைத்தையும் கருப்பு வெள்ளையிலேயே வரைந்துள்ளார் புகழேந்தி. அவற்றில் கடைசியாக அக்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியம் கண்ணைத் திறப்பதாக உள்ளது, அமைதிக்கு அங்கு சாவு மணி அடிக்கப்பட்ட பின்னரே அந்தக் கோரப் படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளது என்பதை சித்தரிக்க, அமைதியின் சின்னமாக கருத்தப்படும் புறா ஒன்று துப்பாக்கியால் குத்திக் கிழிக்கப்பட்டு இறந்து தொங்குகிறது. 

ஒவ்வொரு ஒவியத்தின் கீழும் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் எழுதிய கவிதை வரிகள் ஓவியத்தின் உட்பொருளுக்கு அழுத்தத்தை சேர்க்கிறது. முள்வேலிக்குள் அடைபட்டு நிற்கும் சிறுவனின் ஓவியம். 'இந்த முள்வேலி நிரந்தரமானதல்ல, அது உடைக்கப்படும்' என்று எதிர்காலத்தைக் கூறுகிறது கவிதை.
காயம்பட்ட ஒருவரை போராளி ஒருவர் சுமந்து செல்கிறார். அதற்கு 'காயம் படாத தேசம் விடுதலை பெறுவதில்லை' என்கிறார் காசி ஆனந்தன். இப்படி ஓவியமும் கவிதையும் இணைந்து தமிழர் எதிர்கொண்ட துயரத்தையும், வீரத்தையும் ஒருங்கே பறைசாற்றுகின்றன. 

இந்த ஓவியக் காட்சி வரும் ஞாயிற்றுக் கிழமை வரை காலை 10 முதல் மாலை 8 மணி வரை நடைபெறும். 

ஓவியர் புகழேந்தி காட்டியுள்ள போர் முகங்கள்!
http://tamil.webdunia.com/miscellaneous/literature/drama/1005/13/1100513085_1.htm


No comments:

Post a Comment